கள்ளச்சாராயம் அருந்தி 200 பேர் பலி - நிதிஷ் குமார் உண்மையை மறைக்கிறார்: சிராக் பாஸ்வான் பரபரப்பு புகார்

கள்ளச்சாராயம் அருந்தி 200 பேர் பலி - நிதிஷ் குமார் உண்மையை மறைக்கிறார்: சிராக் பாஸ்வான் பரபரப்பு புகார்

பிஹார் கள்ளச்சாராய மரணத்தில் உண்மை மறைக்கப்படுவதாகவும், உண்மையில் 200 பேருக்குக் குறையாமல் உயிரிழந்துள்ளதாகவும் பிஹார் ஜமுய் லோக்சபா எம்பியும், லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) தலைவருமான சிராக் பாஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய சிராக் பாஸ்வான், "கள்ளச்சாராயம் அருந்தி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உண்மை மறைக்கப்படுகிறது. இறந்தவர்களின் இறுதிச் சடங்குகள் பிரேதப் பரிசோதனை அறிக்கை இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான நிர்வாகம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. மரணத்திற்கு மதுவைக் காரணமாக சொல்லக்கூடாது என்று அரசாங்கம் அவர்களை அச்சுறுத்துகிறது. இல்லையேல் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். முதல்வர் நிதிஷ் குமாரின் மவுனம் ஊழல் அதிகாரிகளுக்கு ஆதரவாக உள்ளது" என்று கூறினார்.

சாப்ரா கள்ளச்சாராய துயரச் சம்பவம் தொடர்பாக பிஹார் அதிகாரிகளுக்கு முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவளித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், "இந்த உயிரிழப்புகளுக்கு நிதிஷ் குமாரே பொறுப்பு. நிதிஷ் குமாருக்கு எதிராக ஏன் எப்ஐஆர் பதிவு செய்யக்கூடாது? சட்டத்தை மீறிய குற்றத்திற்காக மட்டும் அல்லாமல், சாப்ராவில் நடந்த மரணங்களிலும் அவர் குற்றவாளி என்று நான் குற்றம் சாட்டுகிறேன். குடிப்பவர்கள் சாவார்கள் என்று நிதிஷ் குமார் ஆணவமாக கூறியுள்ளார். எந்த மாநிலத்திலும் எந்த முதலமைச்சரும் இதுபோன்ற வெட்கமற்ற கருத்தை மாநில மக்களுக்கு வழங்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன் " என சிராக் பாஸ்வான் நேற்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in