எல்லையில் அத்துமீறிய சீன ராணுவம்; அதிரடி காட்டிய இந்திய ராணுவம்: நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

எல்லையில் அத்துமீறிய சீன ராணுவம்; அதிரடி காட்டிய இந்திய ராணுவம்:  நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

அருணாச்சல பிரதேச எல்லை அருகே இந்திய- சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.

அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் கடந்த 9-ம் தேதி சீன ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள், சீன வீரர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீன வீரர்கள் எல்லைக்கு அருகே சட்டவிரோதமாக வேலி அமைக்க முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நீடித்த இந்த மோதலில் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் இருதரப்பு வீரர்களும் அப்பகுதியிலிருந்து விலகி தங்கள் பகுதிக்கு திரும்பிவிட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2006-ம் ஆண்டு முதலே இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் இருதரப்பு வீரர்களுக்கும் இடையே இதுபோன்ற மோதல்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, அமைதியை நிலைநாட்டுவதற்காக ஏற்கெனவே உள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின்படி இந்திய கமாண்டர், சீன கமாண்டருடன் கொடி அணிவகுப்பு கூட்டம் நடத்தினார்.

இதனிடையே, எல்லையில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் கம்புகளால் தாக்கி அடித்துவிரட்டுகின்றனர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூட் வெளியிட்டுள்ளார். சீன ராணுவத்தினரின் அத்துமீறல் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in