அடித்தளம் போடுகிறது சீனா... புறந்தள்ளுகிறது மத்திய அரசு: எச்சரிக்கும் ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

எதிர்காலத்தில் இந்தியாவுக்கு விரோதமாக செயல்படவே சீனா லடாக் எல்லைப் பகுதியில் பாலம் காட்டுவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

இந்திய -சீன எல்லைப்பகுதியான லடாக்கில் சீனா பாலம் கட்டும் நடவடிக்கை என்பது ஒரு 'எச்சரிக்கை அலாரம்' என்று அமெரிக்க உயர் ஆணையர் தெரிவித்துள்ள ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, " எதிர்காலத்தில் நமக்கு விரோதமான செயல்களை செய்ய சீனா அடித்தளம் இட்டுக்கொண்டிருக்கிறது. இதை மத்திய அரசு புறம்தள்ளுவது என்பது நாட்டை ஏமாற்றுவதாகும்" என தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் டிசோ ஏரியில் சீனா தனது இரண்டாவது பாலத்தை கட்டி வருவது செயற்கைகோள் படங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே பதற்றம் நீடித்துவரும் நிலையில், இந்த கட்டுமானம் தொடர்பாக மத்திய அரசின் எதிர் நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in