
சீனாவை அச்சுறுத்தி வரும் உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் பிஎஃப். 7 தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது.
இந்த புதிய வகை கரோனா தொற்று குஜராத்தில் இரண்டு பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் பரவியுள்ளது. சீனாவில் உருமாறிய இந்த ஒமைக்ரான் வகை கரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. சீனாவில் தொற்றுப் பரவல் அதிகரித்த நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த சூழலில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய அரசு, மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.