மீண்டும் அத்துமீறும் சீனா: அருணாசல பிரதேசம் அருகே கட்டுமானப் பணிகள் தீவிரம்!

மீண்டும் அத்துமீறும் சீனா: அருணாசல பிரதேசம் அருகே கட்டுமானப் பணிகள் தீவிரம்!
சீன ராணுவம்கோப்புப் படம்

அருணாசல பிரதேசம் அருகே சர்வதேச எல்லையில் கட்டுமானப் பணிகளில் சீனாவின் மக்கள் விடுதலைப் படை (சீன ராணுவம்) தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து அசாம் மாநிலம் குவாஹாட்டியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவத்தின் கிழக்குப் பிரிவு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்பி காலிதா, “திபெத் பிராந்தியத்தில் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி) குறுக்கே, பெருமளவிலான கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. ஏதேனும் நடந்தால் எதிர்வினையாற்ற அல்லது படைகளைத் திரட்ட வசதியாக சாலைகளை மேம்படுத்துவது, ரயில் பாதை, வான்வழிப் போக்குவரத்து ஆகியவற்றுக்கான பணிகள் சீனாவின் தரப்பில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன” என்று கூறினார். உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே, எல்லை கிராமங்களை சீனா அமைத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், “நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். நிலைமையைச் சமாளிக்கும் வகையில் நமது கட்டமைப்புகளையும் திறன்களையும் மேம்படுத்தும் பணிகளில் நாமும் ஈடுபட்டிருக்கிறோம். இதன் மூலம் நமது தரப்பும் வலிமையான நிலையில் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

எல்லை அருகே கடினமான நிலப்பரப்பும் சீரற்ற வானிலையும் மிகப்பெரிய சவால்களாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in