‘டிக்டாக்-ஐ நசுக்கப் பார்க்கிறார்கள்!’

அமெரிக்காவுக்கு எதிராக சீனா ஆவேசம்
டிக்டாக்
டிக்டாக்

வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக்கை, அமெரிக்கா நசுக்கப் பார்க்கிறது என சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவில் டிக்டாக் செயலி 3 ஆண்டுகளுக்கு முன்னரே தடை செய்யப்பட்டது. இந்த சீன செயலி இந்தியர்களின் தரவுகளை களவாடுவதாகவும், தேச பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகவும் அப்போது குற்றம் சாட்டப்பட்டது. தற்போது அதே நெருக்கடி அமெரிக்காவில் எழுந்துள்ளது.

கடந்த டிசம்பர் முதலே டிக்டாக் செயலிக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. வெள்ளை மாளிகையில் தொடங்கி, பாதுகாப்பு துறையினர் வரை டிக்டாக் செயலிகளை பயன்படுத்த அமெரிக்க தடை விதித்தது. பின்னர் அரசு டிஜிட்டல் சாதனங்கள் அனைத்துக்கும் இந்த தடை விரிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து அமெரிக்கர்களின் தரவுகளை டிக்டாக் வாயிலாக, சீனா சேகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. ஆனால் டிக்டாக் செயலிக்கு அடிமையான அமெரிக்கர்கள் மத்தியில் இந்த எச்சரிக்கை எடுபடவில்லை. எனவே அடுத்த அதிரடியில் இறங்கியது.

இதன்படி, டிக்டாக் பங்குகளை விற்றுவிடுமாறு அதன் சீன உரிமையாளர்களுக்கு அமெரிக்கா நெருக்கடி தந்து வருவதாக சீனா தற்போது சீற்றம் காட்டுகிறது. அமெரிக்க மண்ணில் அந்நிய தேசத்தினருக்கான வணிக உரிமைகள் நசுக்கப்படுவதாகவும், அங்கே வெளிப்படையான வணிக செயல்பாடுகளுக்கு வாய்ப்பில்லை என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் இன்று வெளிப்படையாக குற்றம்சாட்டி உள்ளனர். அவ்வாறு டிக்டாக் பங்குகள் ஒப்படைக்கபடாது போனால், அமெரிக்காவில் டிக்டாக் முழுமையாக தடை செய்யப்படும் என மிரட்டலுக்கு ஆளாவதாகவும் அமெரிக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வலுத்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in