துப்பாக்கி பாதுகாப்போடு பள்ளி செல்லும் குழந்தைகள்: வெறிநாய் தொல்லை கேரளாவில் அதிகரிப்பு

துப்பாக்கி பாதுகாப்போடு பள்ளி செல்லும் குழந்தைகள்: வெறிநாய் தொல்லை கேரளாவில் அதிகரிப்பு

கேரளாவில் வெறிநாய்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க துப்பாக்கி(ஏர் கன்) ஏந்தி ஒருவர் பள்ளி அழைத்துச் செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.

கேரளாவில் கடந்த சில மாதங்களாக வெறிநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. சமீபத்தில் 19 வயது கல்லூரி மாணவி, 12 வயது பள்ளிச்சிறுமி ஆகியோர் வெறிநாய் கடிக்குப் பலியாயினர். இந்த ஆண்டு மட்டும் கேரளாவில் 21 பேர் வெறிநாய் கடியால் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தெருவில் விளையாடவோ, பள்ளி செல்லவோ குழந்தைகள் அச்சப்படுகின்றனர். இந்த நிலையில், காசர்கோடு பகுதியில் சமீர் என்பவர் துப்பாக்கி ஏந்திபடி குழந்தைகளை மதரஸா பள்ளிக்கு அழைத்துச்செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சமீர் கூறுகையில்,‘‘எங்கள் பகுதியில் தெருநாய்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு அஞ்சுகிறார்கள். எனவே, ஏர் கன்னுடன் அவர்களை அழைத்து செல்கிறேன். சட்டரீதியான நடவடிக்கை குறித்து எனக்குப் பயமில்லை" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in