'மகாத்மாவைக் கொண்டாடுவோம்' நிகழ்வில் நெகிழ வைத்த மாணவர்கள்

'மகாத்மாவைக் கொண்டாடுவோம்' நிகழ்வில் நெகிழ வைத்த மாணவர்கள்

தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத் துறையுடன் இணைந்து காந்தி உலக மையம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற 'மகாத்மாவைக் கொண்டாடுவோம்'  என்னும் நிகழ்ச்சியில் காந்தி வேடமணிந்த  ஏராளமான மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகத் துறையும், காந்தி உலக மையமும் இணைந்து  மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் இன்று இந்த சிறப்பு நிகழ்வை நடத்தினர்.  இந்த  நிகழ்வில்  தமிழ்நாடு முழுவதும் 21-க்கும் மேற்பட்ட  மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவ மாணவியர்களும், ஆசிரியப் பெருமக்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இதில் 154 சிறுவர்கள்  காந்தியடிகள் வேடமணிந்து மேடையில் தோன்றினர். காந்தியச் சிந்தனைகள் மாணவர்களிடமிருந்தே தொடங்க வேண்டும். அவை மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரவ வேண்டும் என்னும் நோக்கில் நடைபெற்ற இச்சீர்மிகு விழாவில் மாணவர்களுக்குள் இருக்கும் மகாத்மாவை அடையாளம் காட்டவும்,மாணவர்களைப் போற்றவும் மகாத்மா காந்தி வேடமணிந்த 154  மாணவச் செல்வங்கள்  பிரம்மாண்ட மேடையில் அணிவகுத்தனர்.

அது அங்கிருந்தவர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்நிகழ்வில், வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், நடிகர் ரமேஷ்கண்ணா, நாமக்கல் கவிஞரின் பேரன், கக்கன் அவர்களின் பேத்தி, இயக்குநர் உதயன், உதவி இயக்குநர் காந்திமதி, தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் அனந்தராமன், காந்தி உலக மைய நிறுவனர் ராஜேஷ்,எழுத்தாளர் சிகரம் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு  நடைபெற்ற இந்த  விழாவில் காந்தி வேடமணிந்த சிறுவர்கள் கலந்து கொண்டு அணிவகுத்தது அனைவரையும் நெகிழச் செய்தது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in