திருமணமாகாமல் குழந்தை பெற்ற இளம்பெண்; 5 நாட்களில் 2.5 லட்சத்திற்கு சிசு விற்பனை: சென்னையில் மூவர் கைது

திருமணமாகாமல் குழந்தை பெற்ற இளம்பெண்;  5 நாட்களில்  2.5 லட்சத்திற்கு சிசு விற்பனை: சென்னையில் மூவர் கைது

திருமணமாகாமல் பிறந்த குழந்தையை 2.5 லட்சத்திற்கு விற்ற காதலன், தன்னுடைய காதலிக்கு ஒரு லட்ச ரூபாயை பங்கு கொடுத்துள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக இளம் ஜோடி ஒன்று காதலித்து வந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அந்த பெண் கருவுற்றிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணம் செய்து கொள்ள முடியாமலே குழந்தை பிறந்துள்ளது என்பதால் இருதரப்பினரும் தங்கள் வீட்டில் இதைத் தெரிவிக்க அச்சமடைந்தனர். மேலும், அந்த குழந்தையை தங்களுடன் வைத்துப் பராமரிக்கவும் அவர்கள் விரும்பவில்லை. இதனால் இருவரும் சேர்ந்து அந்த குழந்தையை விற்கும் முடிவிற்கு வந்தனர்.

குழந்தை பிறந்து 5 நாட்களேயான நிலையில், அந்த குழந்தை இடைத்தரகர் மூலம் 2.5 லட்ச ரூபாய்க்கு விற்றனர். இதில் கிடைத்த பணத்தில் காதலிக்கு ஒரு லட்ச ரூபாயைக் காதலன் பங்கு கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அந்த குழந்தை கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து காதலன், இடைத்தரகர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2021- ம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னையில் நடந்த குழந்தை விற்பனை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in