குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்கள் பதிவு: 57 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்கள் பதிவு: 57 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களைப் பதிவேற்றம் செய்த 57 ஆயிரம் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களைப் பதிவேற்றம் செய்து, அவற்றை ஊக்குவிக்கும் நபர்களது ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று, மகளிர் ஆணையத்தலைவர் ஸ்வாதி மலிவல் செப்டம்பர் 20-ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து, நாடு முழுவதும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை, ஆபாச படங்களை ஊக்குவித்த 57 ஆயிரத்து 643 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

இதே போல இந்தியா முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 23 லட்சம் கணக்குகளை முடக்கியதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in