வீட்டின் முன்பு விளையாடிய குழந்தை; கொம்பால் தூக்கி வீசிக் கொன்ற மாடு: பதறவைக்கும் வீடியாே

வீட்டின் முன்பு விளையாடிய குழந்தை; கொம்பால் தூக்கி வீசிக் கொன்ற மாடு: பதறவைக்கும் வீடியாே

வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை மாடு ஒன்று கொம்பால் தூக்கி வீசிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம், அலிகார் பகுதியில் வீட்டுக்கு வெளியே குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. பெற்றோர் வீட்டிற்குள் இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த மாடு ஒன்று குழந்தையை கொம்பால் தூக்கி வீசியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தந்தை ஓடி வந்தார். கீழே விழுந்து கிடந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டின் முன்பு நின்ற குழந்தையை மாடு கொம்பினால் தூக்கி வீசிக் கொன்ற வீடியோ காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in