வெந்நீர் பாத்திரத்தில் விழுந்த குழந்தை; அலறியபடி ஓடோடி வந்த தாய்: விளையாடிய போது நடந்த விபரீதம்

வெந்நீர் பாத்திரத்தில் விழுந்த குழந்தை; அலறியபடி ஓடோடி வந்த தாய்: விளையாடிய போது நடந்த விபரீதம்

வெந்நீர் வைத்திருந்த பாத்திரத்தில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளுவர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பத்தைச் சேர்ந்தவர் ரசாக்- ஜெரினா தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயது அஜ்மீர் குழந்தை இருந்தது. கடந்த 10-ம் தேதி குழந்தை அஜ்மீரை குளிக்க வைப்பதற்காக குளியலறையில் வெந்நீரை பெரிய பாத்திரத்தில் ஊற்றி வைத்துள்ளார் ஜெரினா. இதன்பின்னர், சோப்பு, துண்டு எடுப்பதற்காக ஜெரினா வீட்டிற்குள் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அஜ்மீர் எதிர்பாராத விதமாக வெந்நீர் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்துவிட்டான்.

பிள்ளையின் அழுகுரல் கேட்டு அலறியப்படி ஓடி வந்த தாய் ரெஜினா குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். அதன் பின்னர் குழந்தை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று இரவு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in