குற்றாலம் அருவியில் தவறி விழுந்து இழுத்துச் செல்லப்படும் குழந்தை: வைரலாகும் வீடியோ

குற்றாலம் அருவியில் தவறி விழுந்து இழுத்துச் செல்லப்படும் குழந்தை: வைரலாகும் வீடியோ

குற்றாலம் அருவியில் உள்ள தடாகத்தில் இருந்து திடீரென தவறி விழுந்து நான்கு வயது பெண் குழந்தை நீரில் இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் இன்று மதியம் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நான்கு வயது குழந்தை அருவியின் ஓரமாக உள்ள தடாகத்தில் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த இளைஞர் ஒருவர் ஓடோடிச் சென்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட அந்த குழந்தையை விரைந்து சென்றுமீட்டார்.

இதுகுறித்து விசாரித்த போது கேரளா மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் குற்றாலம் அருவியில் குளிக்க வந்ததும், அவரது நான்கு வயது குழந்தை தடாகத்தில் தவறி விழுந்ததும் விழுந்ததும் தெரியவந்தது. அவர்கள் குளிக்கும் போது குழந்தையைக் கவனிக்கவில்லை என்றும், அந்த குழந்தை அருவியின் முன்புறமுள்ள பகுதியில் தவறுதலாக இறங்கிய போது வழுக்கி தடாகத்தில் விழுந்ததும் தெரிய வந்தது. நவ்வாய்ப்பாக அந்த குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளது.

குழந்தை வழுக்கி விழும் பகுதியில் பொதுப்பணித்துறையால் முன்பு வலை வைத்து அடைக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த வலை தற்போது இல்லை. இதன் காரணமாக அதிலிருந்த துவாரத்தின் வழியாக குழந்தை விழுந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தை நீரிதல் இழுத்துச் செல்லப்படும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in