
தாய்ப்பால் குடித்துக் கொண்டு இருந்த குழந்தை மூச்சுத்திணறி பலியானது. இந்த சோகத்தில் தாய் தன் மூத்த மகனைக் கொன்று தானும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம், தொடுபுழாவைச் சேர்ந்தவர் லிஜி(38). இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே 7 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
நேற்று மாலையில் வீறிட்டு அழுத குழந்தைக்கு லிஜி வழக்கம்போல் தாய்ப்பால் கொடுத்தார். அப்போது பால் தொண்டனையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை அவரது கண்முன்பே பரிதாபமாக உயிர் இழந்தது. முன்னதாக மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை லிஜி மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகச் சொல்ல அந்த சோகத்தில் லிஜி யாருடமும் பேசாமல் அதிர்ச்சியில் உறைந்தவாறு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை தன் 7 வயது மகனுடன் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். குழந்தை இறந்த சோகத்தில் தாய், மகனுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.