பால் குடிக்கும்போதே மூச்சுத் திணறல்; கவனிக்காத தாய்: பறிபோன குழந்தையின் உயிர்

பால் குடிக்கும்போதே மூச்சுத் திணறல்; கவனிக்காத தாய்: பறிபோன குழந்தையின் உயிர்

பால்குடித்து விட்டு தூங்கிய மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை அண்ணாநகர் சத்தியசாய் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் எழிலரசன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் எழிலரசன்- சௌமியா என்ற தம்பதிக்கு மூன்றரை வயதில் தேஜி என்ற குழந்தை இருந்தது. நேற்று மதியம் சௌமியா குழந்தை தேஜிக்கு பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். பின்னர் சௌமியா வழக்கம் போல் வீட்டு வேலை செய்து முடித்துவிட்டு மாலை குழந்தையை வந்து பார்க்கும்போது மெத்தையில் குழந்தை அசைவின்றி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே குழந்தை தேஜியை தூக்கிக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று காண்பித்தபோது மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் அண்ணாநகர் காவல்துறையினர் குழந்தையை சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குழந்தைக்கு தாயார் செளமியா பால் கொடுத்து தூங்க வைத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் குழந்தை தேஜி மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இருப்பினும் குழந்தையின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in