மர்மக் காய்ச்சலுக்கு குழந்தை பலி: சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு!

மர்மக் காய்ச்சலுக்கு குழந்தை பலி: சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு!

தென்காசி மாவட்டத்தில் 11 மாதங்களே ஆன குழந்தை மர்மக் காய்ச்சலுக்குப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், ஓடைக்கரைப்பட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் வீரபாண்டி(29). இவருக்கு 11 மாதத்தில் மது ஸ்ரீ என்னும் பெண் குழந்தையும் இருந்தது. கடந்த மூன்று தினங்களாகவே இந்தக் குழந்தைக்கு காய்ச்சல் இருந்தது. இதனோடே வயிற்றுப் போக்கு பிரச்சினையும் இருந்துவந்தது. இதைத் தொடர்ந்து வீரபாண்டி தன் மகளைக் கழுகுமலை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கிருந்து மருந்து வாங்கி குழந்தைக்கு கொடுத்தார். இந்நிலையில் குழந்தை திடீரென மூச்சின்றி, அசைவும் இல்லாமல் இருந்தது. உடனே வீரபாண்டி குழந்தையைத் தூக்கிக்கொண்டு கழுகுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தை மதுஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் குழந்தை மர்மக் காய்ச்சலுக்கு பலியான விசயம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஆய்வுசெய்து வருகின்றனர். இதுகுறித்து அய்யாபுரம் காவல்நிலைய போலீஸாரும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in