விளையாடிய போது தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி: பொங்கல் அன்று நேர்ந்த சோகம்

விளையாடிய போது தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பலி: பொங்கல் அன்று நேர்ந்த சோகம்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிந்தது. பொங்கல் அன்று இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

விருகம்பாக்கம், ராஜேஸ்வரி காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும்பவர் அருண்குமார். இவர் வியாபாரிகள் சங்க பேரவையில் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவரது ஒரு வயது மகன் இளமாறன். இந்நிலையில் நேற்று குழந்தை இளமாறன் வீட்டு கழிவறையிலிருந்த தண்ணீரில் பக்கெட்டில் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது தாய் சென்று பார்த்தபோது தண்ணீர் இருந்த பக்கெட்டில் குழந்தை மூழ்கி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, குழந்தையை மீட்டு கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உயிரிழந்த குழந்தை இளமாறன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

பொங்கல் தினத்தன்று ஒரு வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in