தண்ணீர் பக்கெட்டுக்குள் தலையை விட்ட குழந்தை: சென்னையில் தொடரும் சோகம்

தண்ணீர் பக்கெட்டுக்குள் தலையை விட்ட குழந்தை: சென்னையில் தொடரும் சோகம்

ஒன்றரை வயது பெண் குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தைகளைப் பெற்றோர்கள் எவ்வளவுதான் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டாலும், தவிர்க்க முடியாத நிகழ்வுகளால் தங்கள் குழந்தைகளை இழக்க நேரிடுகிறது. கடந்த சில தினங்களாகக் குழந்தைகள் இறப்பது குறித்து அடிப்படி வெளியாகும் செய்திகள் பெற்றோர்களை அதிர்ச்சியடையச் செய்கின்றன.

சென்னையில் 3 மாடியிலிருந்து ஒன்றரை வயதுக் குழந்தை தவறி விழுந்து இறந்தது, விசில் தொண்டையில் அடைத்து குழந்தை இறந்தது எனப் பல பரிதாபங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அதுபோல் நேற்று பாத்ரூமில் ஒன்றரை வயதுக் குழந்தை பக்கெட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல்குமார்(28), இவர் தனது குடும்பத்துடன் பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கத்தில் தங்கியுள்ளார். மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் வேலை செய்து வரும் இவருக்கு சந்திரிகா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. நேற்று காலை ராகுல்குமார் வேலைக்குச் சென்ற நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தை மட்டும் வீட்டிலிருந்துள்ளனர்.

நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, தண்ணீர் பிடித்து வைத்திருந்த பக்கெட்டில் குப்புற விழுந்து இறந்துள்ளது. வீட்டிற்கு வெளியில் இருந்த தாய் உள்ளே வந்து பார்த்த போது குழந்தை தண்ணீரில் குழந்தையின் முகம் மூழ்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை மீட்டு, பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in