விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்: மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய தலைமைச்செயலாளர்

ஆட்டோ ஓட்டுநர் விஜி.
ஆட்டோ ஓட்டுநர் விஜி.

சென்னை தலைமைச் செயலகம் அருகே விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரை அந்த வழியாக சென்ற தலைமைச் செயலாளர் இறையன்பு மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் 11-வது தெருவைச் சேர்ந்தவர் விஜி (40). ஆட்டோ ஓட்டுநரான இவர் போர் நினைவுச் சின்னம் பகுதியிலிருந்து பாரிமுனை நோக்கி சென்று கொண்டிருந்தார். தலைமைச் செயலகம் அருகே அவரது ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஆட்டோவின் தார்பாய் கிழிந்தது. அதை விஜி பிடித்தபோது கட்டுப்படுத்த முடியாமல் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

தலைமைச் செயலாளர் இறையன்பு.
தலைமைச் செயலாளர் இறையன்பு.

அப்போது அவ்வழியாக காரில் சென்ற தலைமைச் செயலாளர் இறையன்பு விபத்தைக் கண்டு உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு, விபத்தில் சிக்கி காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் விஜியை மீட்டார். வேறொரு ஆட்டோவில் விஜியை ஏற்றி சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆட்டோ ஓட்டுநர் விஜி தற்போது நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கோட்டை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in