தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ்

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ்

``தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் 25-ம் தேதி அரசு விடுமுறையா என்பது குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார்'' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

எதிர்வரும் 24-ம் தேதி திங்கட்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை நாட்களாக உள்ளதால் தீபாவளி தினத்தையும் சேர்த்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது. இந்த நிலையில் தீபாவளி முடிந்த அன்று இரவு வெளியூர்களில் பணியாற்றுபவர்கள் வெளியூர்களுக்கு கிளம்ப வேண்டும் என்பதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்பதால் மறுநாள் 25-ம் தேதி அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனாலும் தீபாவளிக்கு மறுநாள் 25-ம் தேதி விடுமுறை விடப்படுவது குறித்து அரசு பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் 25 -ம் தேதி என்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் சேர்த்து அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், அரசு ஊழியர்கள் தரப்பிலும் இது குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பொது விடுமுறை அளிக்கப்படுவது குறித்து அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், இதுகுறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in