பிறந்தநாளில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இனிப்பான செய்தி!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இனிப்பான செய்தி!

ஆசிரியர்களுக்கு ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் புதிய கட்டமைப்பு வசதிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கான 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்தான அறிவிப்புகளை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய முதல்வர், "அரசுப் பள்ளி மாணவர்களுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி முடிக்கும் அனைத்து மாணவர்களும் தவறாமல் உயர்கல்விக்குச் செல்ல வேண்டும். அதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது. காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளிட்டவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் படிப்புத் திறனுடன் படைப்புத்திறனும் சேர்ந்து வளர்ந்திட வேண்டும் என்பதே அரசினுடைய நோக்கம். மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர்களின் நலனைக் காக்கவும் புதிய திட்டங்களை செயல்படுத்த நமது அரசு முடிவு செய்துள்ளது.

மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக்கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும். ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். மேலும் உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கபட்டு வரும் கல்விச் செலவு (tuition fee) ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும். அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இத்தகு திட்டங்கள் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்தத் தருணத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in