பரிசு பெற்றவர்களை விட நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன்: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பரிசு பெற்றவர்களை விட நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன்: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது இதில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும், அணிகளுக்கும் பதக்கங்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “ தமிழகத்தை விளையாட்டில் சிறந்த மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட நான் அதிக மகிழ்ச்சியில் உள்ளேன். இந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடத்த மூன்றே மாதங்களில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டோம்.

இதற்காக 102 கோடிரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சிறந்த முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை சிறப்பாக செய்த தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அனைத்து அதிகாரிகளையும் பாராட்டுகிறேன் .விரைவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தனி மைதானங்கள் அமைக்கவும் தமிழகத்தில் விளையாட்டுகளை நடத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் . ஆசிய கடற்கரை போட்டிகளைத் தமிழகத்தில் நடந்த தேவையான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in