அமைச்சருடன் செஸ் விளையாடிய முதல்வர் ஸ்டாலின்: பார்த்து ரசித்த உதயநிதி

அமைச்சருடன் செஸ் விளையாடிய முதல்வர் ஸ்டாலின்: பார்த்து ரசித்த உதயநிதி

அமைச்சர் மெய்யநாதனுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் செஸ் விளையாடினார். இதனை உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ரசித்து பார்த்தனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி தாெடங்கிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, விளையாட்டு போட்டி நடைபெறவுள்ள அரங்குகளின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் மெய்யநாதனுடன் செஸ் விளையாடினார். முதல்வர் ஒவ்வொரு காய்களை நகர்த்திய போது அங்கிருந்த உதயநிதி மற்றும் அமைச்சர்கள் ரசித்து பார்த்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in