`உங்களது ஈரமனது எனது இதயத்தை நனைத்துவிட்டது'- தம்பதிக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பாராட்டு

`உங்களது ஈரமனது எனது இதயத்தை நனைத்துவிட்டது'- தம்பதிக்கு முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பாராட்டு

ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி வரும் ஈரோடு தம்பதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பாராட்டியுள்ளார்.

ஈரோட்டை சேர்ந்தவர் வெங்கட்ராமன்- ராஜலட்சுமி தம்பதி. இவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த உணவகத்தில் பகல், மதியம், இரவு என்று 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், சாப்பாடு ஒன்று ஒரு ரூபாய்தான். ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். பாதிக்கப்படும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மருத்துவமனை சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நோயாளிகளின் உறவினர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் வெளியில் சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மூன்று வேளைக்கும் அவர்கள் சாப்பாட்டுக்கு நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டியதுள்ளது. இதனால், அவர்கள் பணம் இல்லாமல் கடும் நெருக்கடியை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த ஏழைகளின் பசியைத்தான் கடந்த 15 ஆண்டுகளாக தீர்த்து வருகிறார்கள் வெங்கட்ராமன்- ராஜலட்சுமி தம்பதியினர்.

இந்த தம்பதியின் உன்னத சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றி, எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது. ஈதல்! இசைபட வாழ்தல்! இதுவே தமிழறம்!" என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in