சிவமணியுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்த முதல்வர் ஸ்டாலின்!

சிவமணியுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்த முதல்வர் ஸ்டாலின்!

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இசைக்கலைஞர் சிவமணியுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் வாசித்து அசத்தினார்.

சென்னை மாமல்லபுரத்தில் ஆக. 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செஸ் ஒல்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்புப் பாடலில் அணிந்து இருந்த கருப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் ஆகியோர் இணைந்து பல பாடல்களை இசைத்தனர். அப்போது சிவமணி மேடையில் இருந்து கீழே வந்து முதல்வரை டிரம்ஸ் வாசிக்க அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்டு மு.க.ஸ்டாலின், சிவமணியுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தார். இதைக் கேட்ட நிறைவு விழாவில் பங்கேற்றவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in