மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் `வானவில் மன்றம்’ திட்டம்: தொடங்கி வைத்தார் முதல்வர்

திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்
திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்

பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் விதத்தில்  அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’ என்ற திட்டத்தை  திருச்சி மாவட்டம் காட்டூரில் முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த, பள்ளிகளில் முதல்முறையாக ‘வானவில் மன்றம்’ அமைக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 13,210 அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’ தொடங்கப்படுகிறது.

இதன்மூலம் சிறந்த நிபுணர்களை கொண்டு அறிவியலில் செயல்முறை வடிவில் பல்வேறு சோதனைகளை செய்து காண்பித்து மாணவர்களின் கற்றல் மேம்படுத்தப்படும். அதன்படி, அறிவியல், கணிதப் பரிசோதனைகளை செய்வதற்கு குறைந்த விலையில் பொருட்களை வாங்க, ஒரு பள்ளிக்கு முதல்கட்டமாக ரூ.1,200 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த வானவில் மன்றத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம் காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிட நலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று  தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, இன்று மதியத்துக்குள் மாநிலம் முழுவதிலும் உள்ள 13,210 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் வானவில் மன்றம் தொடங்கப்படுகிறது. 

திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், காட்டூர் - பாப்பாக்குறிச்சி, அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார். மேலும், அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in