தேசப்பிதா படத்திற்கு முதல்வர், ஆளுநர் இணைந்து மரியாதை

தேசப்பிதா படத்திற்கு  முதல்வர், ஆளுநர் இணைந்து மரியாதை

மகாத்மா காந்தியடிகளின் 154- வது பிறந்தநாளை ஒட்டி சென்னை எழும்பூர் காந்தி  அருங்காட்சியத்தில்  உள்ள  காந்தி படத்திற்கு  தமிழக முதல்வர் ஸ்டாலின்,  ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் இணைந்து  மரியாதை செலுத்தினர். 

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் இன்று தேசம் முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தலைநகர் புதுடெல்லியில் ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில்  பிரதமர் நரேந்திர மோடி,  துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர்  உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர். அதேபோல காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். 

அதேபோல சென்னையில் காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி உருவப்படத்திற்கு ஆளுநர் ரவி,  முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து மரியாதை செலுத்தினர்.  அவர்களுடன் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என். நேரு உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.  அரசு சார்பில் அமைச்சர்கள்,  அதிகாரிகள், சென்னை  மேயர் பிரியா  உள்ளிட்டோரும் தேசப்பிதா படத்திற்கு மரியாதை செலுத்தினர். 

அதன் பின்னர் அங்கு காந்தியவாதிகள் நடத்திய நூற்கும்  வேள்வி நிகழ்ச்சியை முதல்வர் மற்றும் ஆளுநர்  இருவரும் இணைந்து பார்வையிட்டனர். இன்று மாலை கிண்டியில் நடைபெறும் விழாவில் பேச்சு, கட்டுரை  உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர்  ரவி பரிசு வழங்குகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in