நடைப்பயிற்சியில் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

நடைப்பயிற்சியில் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் மற்றும் நடைப்பயிற்சிகளை செய்து வருகிறார். மாதத்தில் இரண்டு முறை சைக்கிளிங் செய்யும் ஸ்டாலின், நடைப்பயிற்சியை தினமும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் இன்று அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, பூங்காவில் பணியாற்றுபவர்கள் மற்றும் பொதுமக்கள் 140 பேருக்கு கரும்பு, பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுப் பொருட்களை முதல்வர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதனை எதிர்பார்க்காத ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in