மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையைச் செய்துள்ளார் நீரஜ் சோப்ரா: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையைச் செய்துள்ளார் நீரஜ் சோப்ரா: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஓரிகானில் உள்ள யூஜினில் இன்று நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நீரஜ் சோப்ரா செய்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது இந்திய மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற சாதனையைப் படைத்தற்கு அவருக்கு வாழ்த்துகள். உலக அரங்கில் நீரஜ் சோப்ரா நிகழ்த்திய சாதனை இந்தியாவை பெருமிதம் கொள்ளச் செய்கிறது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in