முப்படைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் அஞ்சலி!

முப்படைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் அஞ்சலி!
வெலிங்டனில் முதல்வர்...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு, இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

விபத்தில் பலியான 13 பேரின் உடல்களும் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் வெலிங்டன் எம்.ஆர்.சி பேரக்ஸில், இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், ராணுவ உயரதிகாரிகள், அரசுத் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கெடுத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

எம்.ஆர்.சி.பேரக்ஸ்
எம்.ஆர்.சி.பேரக்ஸ்

இதன் பின்னர், மதியம் 12 மணி அளவில் 13 பேரின் உடல்களும் கோவை சூலூர் விமானப்படைத் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன. முப்படைத் தளபதியின் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். நாளை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும்.

தயார் நிலையில் ராணுவ வாகனம்
தயார் நிலையில் ராணுவ வாகனம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in