அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்? - யு.யு.லலித்தின் பரிந்துரை என்ன?

அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யார்? -  யு.யு.லலித்தின் பரிந்துரை என்ன?

இந்திய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை பரிந்துரைத்துள்ளார்.

இன்று காலையில் தலைமை நீதிபதி யு.யு.லலித், உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் முன்னிலையில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம் தனது பரிந்துரை கடிதத்தை ஒப்படைத்தார்.

அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்குமாறு கடந்த வாரம் மத்திய அரசு யு.யு.லலித்திடம் கேட்டுக் கொண்டது. நீதிபதி என்.வி.ரமணாவுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் லலித் 49வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

74 நாட்கள் மட்டுமே பதவி வகித்த தலைமை நீதிபதி யு.யு. லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. எனவே 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பது கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது. நீதிபதி சந்திரசூட் நவம்பர் 9 ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக தெரிகிறது. அவர் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரை பதவியில் இருப்பார்.

சந்திரசூட்
சந்திரசூட்

நீதிபதி சந்திரசூட் டெல்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் ஹானர்ஸுடன் பி.ஏ படித்தார். டெல்லி பல்கலைக்கழக வளாக சட்ட மையத்தில் எல்எல்பியும் படித்தார். அவர் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் எல்எல்எம் பட்டம் மற்றும் ஜூரிடிகல் சயின்ஸில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

உச்ச நீதிமன்றத்திலும், மும்பை உயர் நீதிமன்றத்திலும் வழக்குரைஞராக இருந்த இவர் ஜூன் 1998 ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1998 முதல் நீதிபதியாக நியமிக்கப்படும் வரை இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் இவர் இருந்துள்ளார். மார்ச் 2000 ல் மும்பை உயர் நீதிமன்ற ஆனார். பின்னர் அக்டோபர் 2013 ல் அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். மே 2016 ல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in