
லாட்டரி சீட்டு மூலம் ஒரே நாளில் ஒருவர் கோடீஸ்வரரான சம்பவம் கேரளத்தில் நடந்து உள்ளது.
ஓணம் பண்டிகையையொட்டி கேரள அரசு இந்த ஆண்டு முதல் பரிசாக 25 கோடி ரூபாய் அறிவித்திருந்தது. இந்த லாட்டரி சீட்டுக்கான முடிவு நேற்று வெளியானது. இந்த லாட்டரி சீட்டின் முதல் பரிசு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனுக் என்ற கூலித்தொழிலாளிக்கு விழுந்துள்ளது. இவரது குடும்பம் கடனால் கஷ்டப்பட்டு வந்துள்ளது. இதனால் வெளிநாட்டில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற முடிவு செய்துள்ளார் அனுக். இதற்காக வெளிநாடு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஆட்டோ ஓட்டுவது, ஓட்டல்களில் சமையல் வேலை செய்வது என்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் அனுக். 25 கோடி ரூபாய் பரிசு அவருக்கு விழுந்திருப்பது அவரது குடும்பத்தை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த லாட்டரி சீட்டின் விலை 500 ரூபாய். ஆனால் அனுக்விடம் 450 ரூபாய்தான் இருந்துள்ளது. இதனால் தனது மகனின் உண்டியலில் இருந்த 50 ரூபாயை எடுத்து 500 ரூபாய்க்கு லாட்டரி வீட்டு வாங்கியுள்ளார். 25 கோடி விழுந்துள்ள அனுக்விற்கு அரசிற்கு வரி போன 15.75 கோடி அவருக்கு கிடைக்க உள்ளது.
500 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கிய அனுக், தற்போது 25 கோடிக்கு ரூபாய்க்கு சொந்தக்காரராகியுள்ளார்.