சத்தீஸ்கர் தேர்தல் களத்தில் 46 கோடீஸ்வர வேட்பாளர்கள்... யாருக்கு அதிக சொத்து?

சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பாஜன ராமன் சிங்
சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பாஜன ராமன் சிங்

சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு நவம்பர் 7-ம் தேதி முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கும் 2-வது கட்ட தேர்தலில் 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. முதல்கட்டத் தேர்தலில் 223 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 46 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த 223 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 1.34 கோடி ரூபாய். இதில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் அரச குடும்பத்தைச் சேர்ந்த காத்ராஜ் சிங், அதிகபட்சமாக 40 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.

பா.ஜ.கவைச் சேர்ந்த பாவ்னா போஹ்ரா 33 கோடி ரூபாயும், காங்கிரஸ் கட்சியின் கின் ஜதீன் ஜெய்ஸ்வால் 16 கோடி ரூபாயும் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், மொத்த வேட்பாளர்களில் 115 பேர், அதாவது 52 சதவீதம் பேர், 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்துள்ளனர். அதே நேரத்தில் 97 பேர், அதாவது 43 சதவீதம் பேர் பட்டதாரிகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேட்பாளர்களில் 26 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. 16 பேர் மீது தீவிர குற்றவழக்குகள் உள்ளதாகவும், 25 பெண்கள் களத்தில் உள்ளதாகவும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in