10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்தால் ஆச்சரிய பயணம் காத்திருக்கிறது!

சத்தீஸ்கர் முதல்வர் அதிரடி அறிவிப்பு
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்தால் ஆச்சரிய பயணம் காத்திருக்கிறது!

10, 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் ஆச்சரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் தற்போது பல மாநிலங்களில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. கரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத் தேர்வுகள் நடைபெறவில்லை. இந்தாண்டு பொதுத் தேர்வுகளை மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மாணவ, மாணவர்களுக்கு அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் இது எங்கள் மாணவர்களை மேலும் ஊக்குவிக்கும் என்றும் இது மாநிலத்தின் முன்முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in