செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்று அசத்தல் - சாதித்த இந்தியர்கள்!

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்று அசத்தல் - சாதித்த இந்தியர்கள்!

சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரின் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கப்பதக்கம் வென்றார். இந்திய மகளிர் ஏ அணி மற்றும் இந்திய ஓபன் பி அணி ஆகியவை வெண்கலம் வென்றுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நிகால் சரின் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். அர்ஜூன் எரிகாசி வெள்ளிப்பதக்கமும், நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளனர். மேலும் வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்மிக் ஆகியோரும் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய மகளிர் ஏ அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. இந்த போட்டியில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும், ஜார்ஜியா அணி வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளது.

முன்னதாக இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3 -1 என்ற கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இந்திய ஓபன் பி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இதில் உஸ்பெகிஸ்தான் தங்கப்பதக்கத்தையும், அர்மீனியா அணி வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in