மீண்டும் வீறு கொண்டு எழுந்தார் பிரக்ஞானந்தா: 7-வது சுற்றில் கியூபா வீரரை வீழ்த்தினார்!

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 7-வது சுற்றில் கியூபா வீரரை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்ற நாட்டு வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி நடந்த சாண்டோஸ் லடாசா ஜைமிக்கு எதிரான போட்டியில் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வியடைந்தார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 85-வது காய் நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரக்ஞானந்தாவின் தோல்வி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

நான் யானை அல்ல, குதிரை. விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்று நடிகர் ரஜினியின் பஞ்ச் வசனம் பிரக்ஞானந்தாவுக்கு தற்போது பொருந்தியுள்ளது. இன்று நடந்த 7-வது சுற்றில் கியூபா வீரர் இசான் ரெனால்டோவுடன் விளையாடினார் பிரக்ஞானந்தா. இதில் 41-வது காய் நகர்த்தலில் பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி பெற்றார்.

இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய ஈஷா கார்வாடே, சுவிட்சர்லாந்து வீராங்கனை லீனாவை 34-வது நகர்த்தலில் வீழ்த்தினார். 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் அதிக புள்ளிகளை பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in