85-வது காய் நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார்: பிரக்ஞானந்தாவுக்கு நடந்த அதிர்ச்சி

85-வது காய் நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார்: பிரக்ஞானந்தாவுக்கு நடந்த அதிர்ச்சி

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நட்சத்திர வீரரான பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 85-வது காய் நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார் பிரக்ஞானந்தா.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் அதிக புள்ளிகளை பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். நேற்றிரவு நடந்த போட்டியில் நட்சத்திர வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சாண்டோஸ் லடாசா ஜைமிக்கு எதிராக கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 85-வது காய் நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரக்ஞானந்தாவின் தோல்வி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுவரை நடந்து முடிந்துள்ள 5 சுற்றுகளில் பெண்கள் பிரிவில் இந்தியா, ஜார்ஜியா, ருமேனியா அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கின்றன. ஓபன் பிரிவில் தோல்வியை சந்திக்காத இந்தியா 2, அர்மேனியா அணிகள் தலா 10 புள்ளிகளுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளன. இந்தியா 1, அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஈரான், கியூபா ஆகிய அணிகள் தலா 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கின்றன. 6-வது சுற்று போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in