மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட்: ஜோதியை எடுத்துச் சென்றார் விஸ்வநாதன் ஆனந்த்

மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட்: ஜோதியை எடுத்துச் சென்றார் விஸ்வநாதன் ஆனந்த்

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இன்று நடைபெற்றது. இந்தியாவின் மகத்தான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஜோதியை எடுத்துச் சென்றார்.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஜோதி நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்ட இன்று சென்னை வந்தது. இதையொட்டி செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. மாநிலக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் வரை ஜோதி ஓட்டம் நடைபெற்றது.

மாநிலக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், விஸ்வநாதன் ஆனந்திடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஜோதி தொடர் ஓட்டத்தை அமைச்சர்கள் மெய்யநாதான், சேகர்பாபு, மதிவேந்தன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

மாநிலக் கல்லூரி மைதானத்திலிருந்துத் துவங்கி காமராஜர் சாலை, ராஜாஜி சாலை கொடிமரச் சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் சதுக்கம், ஈவெரா சாலை, ராஜா முத்தையா சாலை வழியாக நேரு உள் விளையாட்டரங்கம் வரை ஜோதி ஓட்டம் நடைபெற்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in