அடடா மழை அடை மழை: 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சிரபுஞ்சியில் பதிவு!

அடடா மழை அடை மழை: 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சிரபுஞ்சியில் பதிவு!

எப்போதும் மழை பொழியும் பூமியின் மிக ஈரமான பகுதியான சிரபுஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 972 மிமீ அளவு மழை பதிவாகி உள்ளது, இது வரலாற்றில் மிக அதிகமாக பதிவான மழைப்பொழிவுகளில் ஒன்றாகும்.

மேகாலயா, அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தற்போது மிக அதிக அளவில் கனமழை பொழிந்துவரும் சூழலில், சிரபுஞ்சியில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 2,456 மிமீ மழை பதிவாகியுள்ளது. மூன்று நாட்களுக்குள் சிரபுஞ்சியில் பெய்த மழை என்பது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான முழு மழைக்காலத்தின் போது மும்பை வழக்கமாகப் பெறும் மழையை விட அதிகமாகும். பருவ மழைக்காலத்தில் மும்பையில் சராசரியாக 2,205.8 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. மேலும், ஜூன் 1 முதல் தற்போது வரை சிரபுஞ்சியில் 4,067 மிமீ மழை பதிவாகியுள்ளது.

மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் (ஜூன் 17-ம் தேதி ) 972 மிமீ அளவு மழை பதிவாகி உள்ளது, இது கடந்த 122 ஆண்டுகளில் மூன்றாவது அதிக மழை பெய்யும் நாளாகும். முன்னதாக ஜூன் 16, 1995-ல் 1563.3 மிமீ மழையும், ஜூன் 5, 1956-ல் 973.8 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in