தவறான உறவை முறித்த பெண்: குழந்தைகளைக் கொல்லமுயன்ற கள்ளக்காதலன் தற்கொலை!

தவறான உறவை முறித்த பெண்: குழந்தைகளைக் கொல்லமுயன்ற கள்ளக்காதலன் தற்கொலை!

கள்ளக்காதலை முறித்து கொண்டதால் பெண்ணின் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்ற கள்ளக்காதலன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை பாரதிநகரில் உள்ள குடிசைமாற்று குடியிருப்பில் வசிப்பவர் கவிதா. இவருக்கு ரசூல் என்பவருடன் திருமணமாகி ஸ்டீபன்(9), ஆல்பர்ட்(7) ஆகிய இருபிள்ளைகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் ரசூல், 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றதால் கவிதா தனது பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகின்றார். எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்த கவிதாவுக்கு செங்குன்றம் வடபெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

நாளடைவில் கவிதாவுக்கும், ராஜேஷுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கவிதா ராஜேஷுடன் பேசுவதை நிறுத்தியதுடன் அவருடனான கள்ளக்காதலை முறித்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் நேற்று மாலை கவிதா வீட்டில் இல்லாததை அறிந்து கொண்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த கவிதாவின் குழந்தைகள் ஸ்டீபன், ஆல்பர்ட் இருவருக்கும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்றதுடன் தானும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மயங்கிய நிலையில் இருந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 3 பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் அளித்து வந்த நிலையில் இன்று மதியம் கள்ளக்காதலன் ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி் வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in