கஞ்சா போதையில் நண்பர்களிடையே மோதல்… நண்பரைத் துரத்தி துரத்தி கத்தியால் வெட்டிய வாலிபர்: 10 மாதங்களுக்குப் பின் சிக்கினார்

கஞ்சா போதையில் நண்பர்களிடையே மோதல்… நண்பரைத் துரத்தி துரத்தி கத்தியால் வெட்டிய வாலிபர்: 10 மாதங்களுக்குப் பின் சிக்கினார்

கஞ்சா போதை காரணமாக சக நண்பரைக் கத்தியால் வெட்டிய இளைஞர் பத்து மாதங்களாகத் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னை காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

சென்னை மடுவங்கரைப் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கஞ்சா பழக்கம் உள்ள இவருக்கு, கஞ்சா அடிக்கும் இடத்தில் நொட்டு விக்கி, பிரியாணி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. கஞ்சா போதையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் சுரேஷ், பிரியாணி என்ற இளைஞரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரியாணி நொட்டுவிக்கியிடம் பஞ்சாயத்து செய்துள்ளார். இதையடுத்து பிரியாணியை அழைத்துக் கொண்டு மடுவங்கரைக்குச் சென்று சுரேஷிடம் பேசியுள்ளார் நொட்டு விக்கி.

பின்பு மூவரும் இருசக்கர வாகனத்தில் வெளியே கிளப்பியுள்ளார்கள். கிண்டி அருகே இருசக்கர வாகனத்தில் அவர்கள் சென்ற போது, நொட்டு விக்கி தான் மறைத்து வைத்திருந்த நீளமாகக் கத்தியால் சுரேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயங்களுடன் இருசக்கர வாகனத்திலிருந்து தப்பிக் குதித்து ஓடிய சுரேஷ் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து நொட்டு விக்கி கடந்த பத்து மாதங்களாகத் தலைமறைவாக இருந்துள்ளார். இந்த நிலையில் நொட்டு விக்கியை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். கஞ்சா புழக்கத்தின் காரணமாகச் சென்னையில் அதிகரித்து வரும் குற்றங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in