நிலநடுக்கம் வந்தால் சென்னை தாங்காது: எச்சரிக்கும் கட்டுமான சங்கம்

அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்கள்
அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்கள்நிலநடுக்கம் வந்தால் சென்னை தாங்காது: எச்சரிக்கும் கட்டுமான சங்கம்

சென்னையில் கட்டப்படும் கட்டிடங்கள், கட்டுமான விதிகளைப் பின்பற்றி கட்டப்படவில்லை. தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டப்படுகிறது. நிலநடுக்கம் போன்றவை ஏற்பட்டால் சென்னை தாங்காது என சென்னை கட்டுமான பொறியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் உலகத்தையே உலுக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஐரோப்பா, ஆஸ்திரேலியோ போன்ற நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்படுவதாக தகவல் வெளியாக உள்ளது. புவியியல் வல்லுநர்கள் எச்சரித்தது போலவே நடக்கத் தொடங்கியுள்ளன.

புவியியல் வல்லுநர்கள் எச்சரித்த வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்னையிலும் நிலநடுக்கம் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மைக் குறித்து சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் சீனிவாசனிடம் கேட்டோம். அவர் கூறுகையில், ‘’ சென்னையில் கட்டப்படும் கட்டிடங்களின் உறுதித்தன்மைக் குறித்து அரசு முறையாக ஆய்வு செய்வதில்லை. நிலநடுக்கம் ஏற்படக் கூடும் என்ற கணிப்பில் சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது. பயப்பட வேண்டிய தேவையில்லை என கூறினாலும் கட்டிடங்கள் கட்டும் போது பயன்படுத்தும் பொருட்கள் தரமற்றதாக உள்ளது.

கட்டுமான விதிகளைப் பின்பற்றி யாரும் கட்டிடங்கள் கட்டுவது இல்லை. அதனை அரசும் கண்டுக் கொள்வதில்லை. தயிரில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்தால் என்னாவாகும்? கலக்கும் போது நாணயம் உள்ளே சென்றும் விடும். அதுபோலத்தான் களிமண் மீது பலமாடி கட்டிடங்களைக் கட்டுக்கிறோம். சாதாரண நில நடுக்கம் வந்தாலே தாங்காது.

மண், சிமென்ட் போன்றவை பரிசோதனைக்கு உட்படுத்துவது இல்லை. இதனையெல்லாம் அரசு ஆய்வுக்கு உட்படுத்தி அதன்பின் அனுமதி வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in