மகள்களைக் காப்பாற்றி, ரயிலில் மோதிய தாய்... உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

ரயிலில் அடிபட்டு இறந்த சித்ரா
ரயிலில் அடிபட்டு இறந்த சித்ரா

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மின்சார ரயில் வருவதை அறியாமல் சென்ற மகள்களை, தண்டவாளத்தில் இருந்து காப்பாற்றி விட்டு தாய் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சித்ரா. இவருக்கு சுபிக்சா (22), வர்ஷா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் சித்ரா தனது இரண்டு மகள்களுடன் தி.நகர் சென்று ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கினர். அதன்பின்னர் திருவல்லிக்கேணியில் உள்ள தங்களது வீட்டுக்கு செல்வதற்காக 3 பேரும் தி.நகரில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வந்துள்ளனர். 

பின்னர், வேளச்சேரி மார்க்கமாக செல்லும் பறக்கும் ரயிலில் ஏறுவதற்காக தண்டவாளத்தை தனது இரண்டு மகளுடன் சித்ரா கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக மின்சார ரயில் வந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சித்ரா ஒடிச்சென்று மகள்களை தண்டவாளத்திலிருந்து தள்ளிவிட்டு காப்பாற்றியுள்ளார். ஆனால், அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ரயில் தாய் சித்ரா மீது மோதியது. இச்சம்பவத்தில் சித்ரா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்களின் கவனக்குறைவால் தாய் உயிரிழந்ததைப் பார்த்த மகள்கள் கதறியழுத சம்பவம் அனைவரையும் கலங்க வைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in