புழுதியால் பரிதவிக்கும் சென்னை புறநகர் மக்கள்!

மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளம்
மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளம்புழுதியால் பரிதவிக்கும் சென்னை புறநகர் மக்கள்

குண்டும் குழியுமான சாலைகள், புழுதி கிளம்பும் பகுதி, கம்பிகள் மழைநீர் வடிகால்களில் நீட்டி கொண்டுருக்க தடுப்புகள் இல்லாமல் காட்சியளிக்கிறது சென்னையின் புறநகர் பகுதிகள்.

சென்னையின் புறநகர் பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம், மதுரபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் முழுமையடையாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் அந்த பகுதி வாசிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

ஒரு வருடத்திற்கும் மேலாக கட்டுமான பணிகள் நடைபெறுவதால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சுமார் 20,000 மேற்பட்ட குடும்பங்கள் பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம் வீட்டு வசதி வாரியம் மற்றும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசிக்கின்றனர்.

இந்தப் பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் நிலைகளில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு மழை நீரை வெளியேற்றுவது வழக்கமாக இருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.  

இந்த நிலையில் ஒட்டியம்பாக்கம் ஏரி மற்றும் மதுரபாக்கம் ஏரியை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தோடு இணைக்கும் வகையில் மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு 23 கோடி செலவில் மழை நீர் வடிகால் கட்டுமான பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கியது.

பள்ளம் மேடான சாலையில் செல்லும் வாகனங்கள்
பள்ளம் மேடான சாலையில் செல்லும் வாகனங்கள்புழுதியால் பரிதவிக்கும் சென்னை புறநகர் மக்கள்

அதன் கட்டுமான பணிகள் 70 சதவீதம் அளவிற்கு முடிவடைந்துள்ள நிலையில் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கத்தை இணைக்கும் பாலத்திற்கு அருகே இணைப்பு பகுதி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது.

அதன் கட்டுமான பணிகள் தொய்வாக நடைபெற்று வருவதாலும் பாதுகாப்பு இல்லாமல் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாலும் அந்தப் பகுதி மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். குறிப்பாக பெரும்பாக்கம் பகுதியில் 500 மீட்டர் அளவிற்கு சாலையே இல்லாமல் மண் சாலையாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

புழுதி, முறையான சாலை வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in