போலி ஆன்லைன் விளம்பரத்தால் தற்கொலை செய்த சென்னை மாணவி: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோசடி கும்பல் கைது

கைது செய்யப்பட்ட கும்பல்.
கைது செய்யப்பட்ட கும்பல்.போலி ஆன்லைன் விளம்பரத்தால் தற்கொலை செய்த சென்னை மாணவி: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோசடி கும்பல் கைது

ஆன்லைன் டிரேங் விளம்பரத்தைப் பார்த்து 30 ஆயிரம் ரூபாயை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை செய்த மாணவி மகாலட்சுமி
தற்கொலை செய்த மாணவி மகாலட்சுமி போலி ஆன்லைன் விளம்பரத்தால் தற்கொலை செய்த சென்னை மாணவி: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோசடி கும்பல் கைது

சென்னை ஏழுகிணறு போர்ச்சுகீசியர் தெருவைச் சேர்ந்தவர் சாந்தி். இவருக்குத் திருமணமாகி இரு மகள் உள்ளனர். மூத்த மகள் மகாலட்சுமி (19) தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இளைய மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 15 வருடங்களாக சாந்தி ஆம்வே(எம்எல்எம்) பொருட்களை வாங்கி விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து குடும்பத்தைக் கவனித்து வந்தார்.

இதில் நஷ்டம் அடைந்ததால் குடும்பத்தில் பணக்கஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த மாணவி மகாலட்சுமி தனது தாய்க்கு உதவி செய்ய எண்ணிய போது இன்ஸ்டாகிராமில் ஆன்லைன் டிரேடிங் விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.

அதில் ஆன்லைன் வர்க்கத்தில் முதலீடு செய்யும் தொகையை இரட்டிப்பு செய்து தருவதாக குறிப்பிட்டிருந்தது. இதனை நம்பி கடந்த மார்ச் மாதம் மாணவி மகாலட்சுமி தன் தாய்க்குத் தெரியாமல் அவர் வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாயை எடுத்து ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்துள்ளார்.

ஆனால், விளம்பரத்தில் கூறியது போல் பணம் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி மகாலட்சுமி, தாய்க்குப் பயந்து கடந்த ஏப்.2-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து முத்தையால்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கொல்கத்தாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று இணையத்தில் போலி விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீஸார் கடந்த சில நாட்களாக கொல்கத்தாவில் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டது.

அப்போது இந்த மோசடியில் ஈடுபட்டு கொல்கத்தாவை சேர்ந்த அமானுல்லா கான்(20), முகமதுபாசில்(21), முகமது ஆசிப் இக்பால்(22) ஆகிய மூன்று பேரை நேற்று இரவு கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கும்பல் இணையத்தில் போலி விளம்பரம் செய்து பல கோடி மோசடியில் ஈடுபட்டதும், இவர்கள் மீது மேற்குவங்கத்தில் பல்வேறு சைபர் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in