சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: 272 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் வாகன சோதனை
சென்னையில் வாகன சோதனைசென்னையில் போக்குவரத்து விதிமீறல் ; 272 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடந்த வாகனச் சோதனையில் போக்குவரத்து விதிமீறல் காரணமாக 272 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 272 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் 106 நபர்கள் குடிப்போதையில் வாகனத்தை ஓட்டி வந்துள்ளனர். அவர்கள் அனைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் அதிக அளவில் வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபடுகின்றனர். இதனை கண்காணிக்கும் பொருட்டு சென்னையில் பிரதான சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்தவகையில் சென்னையில் ஒரே நாளில் மட்டும் 8,429 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இதில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய காரணத்திற்காக 109 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல போக்குவரத்து விதிமீறல், முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டிய 166 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, விதிமீறலில் ஈடுபட்ட 272 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல தேடப்படும் குற்றவாளிகளை பிடிக்கும் பொருட்டு சென்னையில் உள்ள 558 தங்கும் விடுதிகளில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் உரிய அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்கக் கூடாது என போலீஸார் வலியுறுத்தி உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in