மெட்ரோ பணிகளால் நெரிசலில் தவிக்கும் சென்னைவாசிகள்!

மெட்ரோ பணிக் காரணமாக போக்குவரத்து நெரிசல்
மெட்ரோ பணிக் காரணமாக போக்குவரத்து நெரிசல்மெட்ரோ பணிகளால் நெரிசலில் தவிக்கும் சென்னைவாசிகள்..!

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோப் பணிகள் தொடங்கியுள்ளன. 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதில் மாதவரம்-சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை, மாதவரம்-சோழிங்கநல்லூர் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் பெரிதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக மாலை மற்றும் காலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

மெட்ரோ திட்ட இயக்குனர் அர்ஜுனன்
மெட்ரோ திட்ட இயக்குனர் அர்ஜுனன்மெட்ரோ பணிகளால் நெரிசலில் தவிக்கும் சென்னைவாசிகள்..!

இரண்டாம் கட்டப்பணிகள் எப்போது முடிவடையும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க என்ன திட்டம் வைத்துள்ளது என மெட்ரோ நிர்வாகம் இரண்டாம் கட்ட திட்ட இயக்குநர் அர்ஜுனனிடம் பேசினோம். ‘’மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் சாலைகளை தொடர்ச்சியாக புதுப்பித்துக் கொண்டுத்தான் இருக்கிறோம். சாலைகளை இனி முழு வீச்சில் மேம்படுத்துதல் பணியை மேற்கொள்ள இருக்கிறோம்.

போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது என்பது உண்மைத்தான். ஆனால் அது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அதற்கான மாற்று வழிகளை யோசித்து வருகிறோம். தடுப்புகளை நீக்கி சாலைகளின் அகலத்தை அதிகரிக்கலாம் என திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்.

இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களில் அந்தப் பணிகள் நிறைவடையும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எங்களால் முடிந்த வகையில் முயற்சி எடுத்து வருகிறோம்’’ என்றார்.

மெட்ரோ பயன்பாடு பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருந்தப் போதிலும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்படும் போது அது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. மெட்ரோ நிர்வாகம் பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடிக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in