சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி: இணையம் மூலம் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு

சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி:  இணையம் மூலம் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு

சென்னை ஓபன் டென்னிஸ் தொடருக்கான டிக்கெட் இன்று முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டியை, தமிழக அரசு டபிள்யூடிஓவுடன்(WTO) உடன் இணைந்து நடத்த உள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் செப்டம்பர் 12-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்காக உலகத் தரத்தில் மைதானத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடர்ந்து சென்னையில் சர்வதேச விளையாட்டுப் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. செஸ் ஒலிம்பியாட் போல் மக்களிடம் விழிப்புணர்வு மேற்கொள்வதற்காக, தமிழக டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் செப்டம்பர் 8-ம் தேதி முதல் இந்த மைதானத்தில் பயிற்சியைத் தொடங்க உள்ளனர்.

இந்நிலையில் சென்னை ஓபன் டென்னிஸ் தொடருக்கான டிக்கெட் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் போட்டிகளைக் காண இணையத்தின் மூலம் டிக்கெட் பெறும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. chennaiopenwta.in என்ற இணையதளத்தின் மூலம் இன்று முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in