சோதனை பயணத்தை இனிதே தொடங்கியது தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்

சோதனை பயணத்தை இனிதே தொடங்கியது தென்னிந்தியாவின் முதல்  வந்தே பாரத் ரயில்

சென்னையில் இருந்து மைசூருக்கு எதிர்வரும்  11-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் இன்று தனது சோதனை ஓட்டத்தை  தொடங்கியிருக்கிறது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் தற்போது பிரதமர் மோடியால் இயக்கி வைக்கப்படுகின்றன.  இதுவரை நான்கு ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் ஐந்தாவதாக சென்னையிலிருந்து  மைசூருக்கு எதிர்வரும் 11-ம்  தேதியன்று வந்தே பாரத் ரயிலை  பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். தென்னிந்தியாவில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும். இந்த ரயில் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது. அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படியே தனது சோதனை ஓட்டத்தை இந்த ரயில் தொடங்கியிருக்கிறது. அதன்படி இன்று காலை 5.50 மணிக்கு சென்னையில் தனது முதல் பயணத்தை  வந்தே பாரத் ரயில் தொடங்கியது. இது காலை 8.50  மணிக்கு ஜோலார்பேட்டைக்கும்,  10.25 மணிக்கு பெங்களூருக்கும் செல்லும்.  அங்கிருந்து புறப்பட்டு இன்று நண்பகல் 12.35 மணிக்கு மைசூரை சென்றடையும். அங்கிருந்து 1.00 மணிக்கு  புறப்பட்டு இரவு  7.45 மணிக்கு சென்னை வந்தடையும்.

75.6 கி. மீ வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில்  சென்னை-மைசூரு இடையிலான 504 கி.மீட்டர் தொலைவை 6 மணி நேரம் 40 நிமிடத்தில் சென்றடையும்.  மணிக்கு 180 கி.மீ. வேகம் வரை இயக்குவதற்கு  தகுதியுடையதாக இருந்தாலும், பல்வேறு காரணங்களால்  மணிக்கு 75.6 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in