இதுவரை இல்லாத அளவிற்கு மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணம்: க்யூஆர் கோடு வசதிதான் காரணமா?

இதுவரை இல்லாத அளவிற்கு மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணம்: க்யூஆர் கோடு வசதிதான் காரணமா?

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் பயண டிக்கெட் பெறுவதற்காக வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக டிக்கெட்டுகளைப் பெறும் வகையில் க்யூஆர் குறியீடு முறையில் டிக்கெட் பெறும் திட்டத்தைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. 

அதன்படி யுபிஐ, இணைய வங்கி, கடன் மற்றும் சேமிப்பு வங்கி போன்ற அனைத்து மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் பயணக் கட்டணத்தைச் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அதற்கு 20 சதவீத கட்டணத் தள்ளுபடியும் மெட்ரோ நிறுவனம் வழங்கியது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் மெட்ரோ ரயிலில் 61.56 லட்சம் பேர் பயணம் செய்தனர். தீபாவளி பண்டிகையின் போது சிறப்பு ரயில்கள் வசதியும் செய்யப்பட்ட நிலையில் 21-ம் தேதி மட்டும் 2,65,683 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்திருக்கிறார்கள். அக்டோபர் மாதத்தில் க்யூஆர் பயணச் சீட்டு முறையில் 18,57,688 பேரும், பயண அட்டை பயணச் சீட்டு மூலம் 36,33,056 பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்திருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in